சினிமா உலகில் வாரிசு நடிகர்கள் அதிகம் அது உண்மைதான் ஆனால் அந்த நடிகர் நடிகைகள் தனது திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தினால் மட்டுமே தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க முடியும் அப்படி நிரந்தர இடத்தை பிடித்த நடிகர்கள் வெகு குறைவு. ஒரு சிலர் உச்ச நட்சத்திரமாக இருக்கின்றனர் அந்த வகையில் சிவக்குமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருக்கின்றனர். நடிகர் சூர்யா, சூரறை போற்று, ஜெய் பீம், எதற்கு துணிந்தவன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து பாலாவுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து தற்போது வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதேபோல நடிகர் கார்த்தி கையிலும் தற்பொழுது பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய படங்கள் இருக்கின்றன முதலாவதாக விருமன் திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் மக்கள் அனைவரும் நல்ல விமர்சனத்தையே கொடுத்து உள்ளதால் விருமன் திரைப்படம்.
அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் ஒரு புதிய உச்சத்தை தொடும் என தெரிய வருகிறது இந்த படம் நடிகர் கார்த்திக்கு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக அமையும் எனவும் கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் குழந்தை பருவத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பவே நல்லா கொழுக் மொழுக்கென்று சூப்பராக இருக்கிறீர்கள் என கூறி லைக்குகளையும் கமெண்ட்களையும் அள்ளி வீசி அசத்தி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் சூர்யா மற்றும் கார்த்தி பள்ளி பருவத்தில் இருக்கும் அந்த புகைப்படத்தை..