வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நடிகர் தான் கார்த்திக். இந்நிலையில் தற்பொழுது இவர் நடிப்பில் விருமன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தினை சூர்யாவின் 2டி என்டர்டைமென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தினை இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார்.மேலும் கொம்பன் திரைப்படத்திற்கு பிறகு கார்த்தி மஷ்ரூம் முத்தையா கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது திரைப்படம் தான் விருமன். இத்திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரபல இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் மேலும் விருமன் படத்தில் சினேகன் பாடல் எழுதியுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக பல பிரபலங்களுடன் மதுரையில் நடைபெற்றது.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சினேகனை சூர்யா மற்றும் கார்த்திக் இருவரும் அழைப்பு கொடுக்கவில்லை. இதன் காரணமாக சினேகன் வேறொரு படத்தின் வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ளும் பொழுது இதனை வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் பாடல் ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை,ஆனால் நாங்களும் படத்தில் பணியாற்றி உள்ளோம் எங்களுக்கு அங்கீகாரம் யாரும் கொடுப்பதில்லை பெரிய நட்சத்திரம் உட்பட அனைவரும் இப்படி தான் நடந்து கொள்கிறார்கள்.
எனவே விருமன் பட குழு அவமானப்படுத்தி இருப்பதாக சினேகன் மறைமுகமாக கூறியிருக்கிறார். அதாவது இந்த தகவலை பாடலாசிரியர் சினேகன் சமீபத்தில் சென்னையில் விர்மன் படத்தின் பிரஸ் மீட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பை விடுத்துள்ளனர்.அப்பொழுது பேசிய சினேகன் அன்று சூரியா, கார்த்திக் அழைப்பு கொடுக்கவில்லை.
ஆனால் இன்று என்னை மறக்காமல் கலந்து கொள்ள அழைத்ததற்கு மிகவும் நன்றி மேலும் சந்தோஷமாக இருப்பதாக கூறி குத்தி காட்டிவுள்ளார். மேலும் எனக்கு நிறைய பணிகள் இருந்தது எனவே இதில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்தேன் ஆனால் இதில் கலந்துக் கொள்ள முடியாமல் போனால் சோசியல் மீடியாவில் சினேகன் கோபமாக இருக்கிறார் இதனால் தான் விருமன் படத்தின் பிரஸ் மீட்டில் கலந்து கொள்ளவில்லை என கூறுவார்கள் என்பதற்காக தான் வந்தேன் என மிகவும் தைரியமாக தெரிவித்துள்ளார்.