நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படதத்தின் டீசர் ஒரு சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் சூர்யாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமேசான் பிரைம் வீடியோ இணையதளத்தில் மூலம் சூரரை போற்று படம் தீபாவளியை முன்னிட்டு படக்குழுவினர்கள் வெளியிட்டார்கள்.
இந்நிலையில் அந்த படம் சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. சூர்யாவின் நடிப்பை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் சூர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் இணையதளத்தில் வசூலில் புதிய சாதனை செய்யப்போகிறது என்று சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
தற்பொழுது இந்த படத்தை பார்த்த வைகைப்புயல் வடிவேலு தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தைப் பார்க்கும் போது என்னை அறியாமலேயே சூர்யா அழும் காட்சியில் பார்த்த போது எனது கண்களில் இருந்து தண்ணீர் தானாக வெளி வந்தது என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன் அவர் அழும். இடங்களில் நம்மை அறியாமலேயே கண்ணீர் வருகிறது இத்தகைய படப்பை எம் மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் வகை புயல் வடிவேலு.
தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 👏💐@Suriya_offl #SooraraiPottru
— Actor Vadivelu (@VadiveluOffl) November 13, 2020