தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்று உள்ளவர் சிறுத்தை சிவா. இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்தை என்னும் வெற்றி படத்தை எடுத்தார் அதனைத் தொடர்ந்து சூர்யாவுடன் கைகோர்த்து சூர்யா 42 வது திரைப் படத்தை எடுக்க வருகிறார்.
இந்த படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் கே. இ. ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு சங்க காலத்தை படமாக உருவாகி வருகிறது மேலும் சூர்யா இந்த படத்தில் பல்வேறு விதமான கெட்டப்புகளில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார் தொடர்ந்து சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் கே. இ. ஞானவேல் ராஜா பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா 42 திரைப்படம் குறித்து பேசி உள்ளார்.
அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. சூர்யா இதற்கு முன் பண்ணிய படங்களை விட இப்படம் மூன்று மடங்கு அதிக பட்ஜெட்டில் தயாராகி வருவதாகவும் இந்த விஷயம் சூர்யாவுக்கு தெரிந்தால் பயப்படுவார் என்பதால் அவரிடம் இதனை சொல்லவில்லை என கூறினார். சூர்யா 42 இந்த அளவிற்கு பிரமாண்டமாக எடுக்கப்படுவது என்றால் அதற்கு ராஜமௌலி தான் காரணம் என தெரிவித்துள்ள..
அவர் இந்த படத்தின் டீசர் ரெடியாக உள்ளதாகவும் வருகின்ற மே மாதம் டீசரை வெளியிடுவோம். மேலும் அவர் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி உடன் கூடிய போஸ்டர் இரண்டு வாரங்களில் வெளியிடுவோம் என கே. இ. ஞானவேல் ராஜா கூறி உள்ளார். சூர்யா 42 படம் முழுக்க முழுக்க 3 டியில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்க.