தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசதி வருகின்றனர் அந்த வகையில் ரஜினி, கமல், அஜித், விஜயை தொடர்ந்து சூர்யாவும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார் இவர் கடைசியாக நடித்த எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியை ருசித்தது.
அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து சூர்யா 42 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் சங்க காலத்து படமாக உருவாகி வருகிறதாம். சிறுத்தை சிவா இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் விறுவிறுப்பாக எடுத்து வருகிறாராம். ஏற்கனவே சிறுத்தை சிவா எடுத்த ஒவ்வொரு படமும் வெற்றி பெற்றுள்ளதால்..
சூர்யா 42 படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கிறது. சூர்யா 42 திரைக்குப் படத்தில் சூர்யாவுடன் இணைந்த திஷா பட்டாணி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர். மேலும் சூர்யா ஆறு விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார். படம் ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறதாம்.
இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தரமான தகவல் வெளியாகி உள்ளது அதாவது சூர்யா 42 திரைப்படத்தின் வியாபாரம் மட்டுமே சுமார் 500 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம் இதன் மூலம் லியோ படத்தின் வியாபாரத்தையே முந்தி உள்ளது.
லியோ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம், OTT மற்றும் பிறமொழி வெளியீட்டு உரிமம் என அனைத்தும் சேர்த்து வைத்து பார்த்தாலே 400 கோடிக்கு தான் விற்று உள்ளதாம். லியோ படத்தை விட சூரியா 42 படத்தின் வியாபாரம் அதிகம். படம் வெளிவந்து வெற்றி பெறும் பட்சத்தில் சூர்யாவின் மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டும் என சொல்லப்படுகிறது.