ஒரு வழியாக ‘சூர்யா 42’ படத்திற்கு கடவுள் பெயரை டைட்டிலாக வைத்த படக் குழு.! டீசர் ரிலீஸ் எப்பொழுது தெரியுமா.?

surya 42
surya 42

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் சமீப காலங்களாக வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூரியா 42 படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் நிலையில் கிட்டத்தட்ட 10 மொழிகளில் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் 3d தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் படக்குழுவினர்கள் மத்தியிலிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. மேலும் இதனை அடுத்து இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பவானி நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர் அந்த வகையில் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் ஓடிடி உரிமம் மிகப்பெரிய தொகைக்கு விலை போய் உள்ளதாக ஏற்கனவே வெளியான நிலையில் இதுவரையிலும் இந்த படத்தின் டைட்டில் மட்டும் வெளியாகவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில் தற்பொழுது படக்குழு இந்த படத்தின் டைட்டிலை உறுதி செய்து உள்ளார்களாம்.

அந்த வகையில் சிறுத்தை சிவா அக்னீஸ்வரன் என்ற டைட்டிலை தேர்ந்தெடுத்து உள்ளாராம். மேலும் இவர் வி என்ற சென்டிமென்ட் இருந்து வருவதால் எனவே வீர் என்று டைட்டிலை தான் முதலில் தேர்ந்தெடுத்தாராம் ஆனால் அது செட்டாகாத காரணத்தினால் அக்னீஸ்வரன் என மாற்றி இருக்கிறாராம்.

அக்னீஸ்வரன் என்பது கடவுளை குறிக்கும் பெயர் என்பதால் ஓகே என ஒத்துக் கொண்டுள்ளார் என சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றனர். இவ்வாறு சூர்யா நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் சூரியா 42 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் இந்த மாதம் வெளிவர இருக்கிறது எனவே விரைவில் இந்த படத்தை ரிலீஸ் தேதியையும் பட குழுவினர்கள் அறிவிப்பார்கள் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.