“SURYA 42” படப்பிடிப்பு தொடங்கியது.! புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்திய நடிகர் சூர்யா.

surya
surya

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தொடர்ந்து வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருகிறார். இப்பொழுது கூட இயக்குனர் பாலாவுடன் மீண்டும் ஒருமுறை கை கோர்த்து வணங்கான் திரைப்படத்தில் நடித்தும் தயாரித்தும் வருகின்றார்.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில் திடீரென தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யா ஏற்கனவே பல்வேறு படங்களில் கமிட்டாகி இருக்கிறோம் நேரத்தை செலவிடுவது வீண்என கருதி திடீரென சிறுத்தை சிவாவை கூப்பிட்டு உடனே படத்தின் பூஜையை தொடங்கினார் தற்பொழுது ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா சூரியா இணையும் இந்த படம் சூர்யாவுக்கு 42வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார் மேலும் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.

நடிகர் சூர்யாவும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் அனைத்துமே.. வெற்றி படங்கள் தான் அந்த வகையில் இந்த படமும் ஒரு வெற்றிப் படமாக இருக்கும் என தெரிய வருகிறது சூரியாவின் 42வது படத்தின் பூஜை ஆகஸ்ட் 22ஆம் தேதி சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி உள்ளது.

அதனை முன்னிட்டு இந்த படத்தின் பூஜையின் போது நடிகர் சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் இணைந்திருக்கும் பொழுது  எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து படபிடிப்பு தொடங்குவதற்கு உங்கள் அனைவரின் ஆசிகளும் தேவை என குறிப்பிட்டுள்ளார் இந்த ட்விட்டர்  பதிவு தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.