சூர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சூர்யா 42 படகுழு அறிவித்துள்ளது.
நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக உள்ளது இந்த படம் குறித்த அடுத்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பெதாணி நடிக்க உள்ளார்.
இந்தப் படம் பத்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் சமீபத்தில் சூர்யா 42வது படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்று வெளியாகி சூர்யா ரசிகர்கள் அதை சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதன்படி தற்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது.
ஆனால் இவ்வாறு செய்தால் பட குழுவினர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் இதற்கு தீர்வு காணும் விதமாக சூர்யா 42 படத்தின் தயாரிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியதாவது அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
எங்கள் தயாரிப்பான #surya42 ன் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்களோ அல்லது வீடியோக்கலையோ பகிர்வதை நாங்கள் கவனித்தோம் என்றால் அவர்கள் மீது பதிப்புரிமை மீறல் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் யாராவது வைத்திருந்தால் உடனடியாக அதை நீக்கி விடுங்கள் அப்படி நீக்கினால் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். எதிர்காலத்தில் அதைப் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அறிவித்துள்ளனர்.