பிரபல காமெடி நடிகர் ஒருவர் நீண்ட வருடமாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார் இவர் தற்போது சூர்யா நடிக்கவிருக்கும் 40வது திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இந்த தகவல் கோலிவுட் சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா இவர் சூரரை போற்று திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பூஜை இன்று நடைபெற இருக்கிறது என தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த திரைப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது இவர் இதற்குமுன் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக டி இமான் இணைந்துள்ளார். அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது.
அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் பல வருடம் கழித்து மீண்டும் சூர்யாவின் திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் இணைந்துள்ளார் ஆம் அவர் வேறு யாரும் இல்லை காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலு தான் இதற்கான பேச்சுவார்த்தைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கருதப்படுகிறது.
மேலும் வடிவேலு சூர்யா கூட்டணியில் இதற்கு முன் ஆறு, சில்லுனு ஒரு காதல் ஆதவன், ஆகிய திரைப்படங்கள் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.