அஜித்தின் மூக்குக் கண்ணாடியை கீழே போட்டு மிதித்த சூரியின் மகன்.? தல ரியாக்சன் என்ன தெரியுமா.? மனம் திறந்த காமெடி நடிகர்

ajith-
ajith-

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “துணிவு” திரைப்படம் முழுக்க முழுக்க பேங்கில் நடக்கும் குளறுபடிகளை அப்பட்டமாக வெளிகாட்டியது படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று அதிக நாட்கள் ஓடியது.

அது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக வெற்றி கண்டது.  ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் சுமார் 230 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க மகிழ் திருமேனி உடன் கூட்டணி அமைத்து தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

லைகா நிறுவனம் மிகப் பிரமாண்ட பொருள் செலவில் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது வெகு விரைவிலேயே இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ஷூட்டிங் சீக்கிரம் தொடங்கும் என தெரிய வருகிறது இதனால் AK 62 படம் இந்த வருடத்தின் இறுதி அல்லது அடுத்த வருடம் ஆரம்பத்தில் ஏகே 62 திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித் பற்றி காமெடி நடிகர் சூரி பேசியது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சூரி சொன்னது… நான் என் மனைவி , பையன் மூவரும் அஜித் சாரை சந்தித்தோம் அப்பொழுது அஜித் அவர்கள் கண்ணாடி அணிந்திருந்தார் திடீரென எனது பையன் அந்த கண்ணாடி எடுத்து கீழே போட்டு மிதித்து விட்டான்.. இதைப் பார்த்த சூரியின் மனைவி மகனை இழுத்து மிதிக்காதே என கூறி இருக்கிறார் சூரிக்கும் தூக்கி வாரி போட்டு விட்டது.

உடனே சூரி அஜித் சாரிடம் சாரி சார் என சின்ன பையன் சாரி என அஜித்திடம் சூரி கூற.. அஜித்  இப்படி பண்ணினாதான் அது குழந்தை.. இல்லன்னா அது குழந்தையே இல்ல.. இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக்கூறி மீண்டும் அந்த கண்ணாடியை சூரியன் மகனிடம் கொடுத்து விளையாட சொன்னாராம். இதனை சமீபத்திய பேட்டியில் சொன்னார் மேலும் பேசிய சூரி இது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சம்பவம் எனவும் கூறினார்.