வீட்டில் தேசிய கொடி ஏற்றிய சூரி – புகைப்படத்தை பார்த்து விலாசி தள்ளும் நெட்டிசன்கள்.

soori

தமிழ் சினிமா உலகில் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இருந்தாலும் தனக்கென ஒரு ஸ்டைலை வைத்துக் கொண்டு காமெடியில் பின்னி பெடல் எடுத்து வருபவர் நடிகர் சூரி. இவர் இதுவரை தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, சூர்யா போன்ற நடிகரின் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டையும் மிகப்பெரிய அளவில் உயர்ந்தி கொண்டு தற்போது தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறார்.

அண்மை காலமாக இவர் காமெடி என்கின்ற அந்தஸ்தையும் தாண்டி முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார் அதன் விளைவாகவோ என்னவோ இவரது திறமையை பார்த்து வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க இருக்கிறார் அதில் முதல் பாகம் இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பல்வேறு டாப் ஹீரோவின் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார் அந்த வகையில் கடைசியாக சிவகார்த்திகேயனுடன் டான் படம் இப்போது கார்த்தி உடன் விருமன் படத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.

மேலும் பல்வேறு புதிய படங்களிலும் சூரி ஒப்பந்தமாகி உள்ளதால் சூரியின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது சினிமாவையும் தாண்டி சூரி மதுரையில் பல்வேறு இடங்களில் அம்மன் என்ற பெயரில் பல ஹோட்டல்களை திறந்து அதிலும் நல்ல காசு பார்த்து வருகிறார். அதனால் சூரி செம்ம சந்தோஷத்தில் இருக்கிறாராம் இப்படி இருக்கின்ற நிலையில் இன்று 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரும் வீட்டில் தேசியக்கொடி ஏற்றி வைத்துள்ளனர் .

அந்த வகையில் நடிகர் சூரியும் தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி புகைப்படத்தை சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்தார். புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நடிகர் சூரி வீட்டில் மாப் துடைக்கும் குச்சியில் தான் தேசிய கொடியை ஏற்றி உள்ளார் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..

soori
soori