மதுரையில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் நடிகர் சூரி. இவருடைய தந்தை ஒரு நாடக நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவருடைய தந்தையின் நடிப்பை பார்த்து வளர்ந்த சூரி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னை திரும்பி இருக்கிறார் நடிகர் சூரி. சென்னை சென்றதும் உடனே பட வாய்ப்பு கிடைத்து விடும் என்றும் என்னுடைய படத்தில் நடிக்க வாங்க என்று அழைப்பார்கள் என்றும் எதிர்பார்த்து கனவோடு வந்தார்.
ஆனால் சென்னை போன பிறகு தான் தெரிந்தது அவருடைய கனவு வீணா போனது என்று. இது தொடர்ந்து சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பல இடங்களுக்கு ஏறி இறங்கி வந்தார் நடிகர் சூரி. ஒரு கட்டத்தில் பசியின் கொடுமையால் வேறு வழி இல்லாமல் சினிமா சார்ந்த பல வேலைகளை செய்து தன்னுடைய பசியை போக்கி வந்தார்.
அந்த வகையில் பல படங்களுக்கு இவர் செட் அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்காது. அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான விண்ணர் படத்திற்காக நடிகர் சூரி அவர்கள் செட் அமைக்கும் காண்ட்ராக்டரிடம் பலகைக்கு ஆணி அடிக்கும் வேலையை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமாவை சார்ந்த தொழிலை செய்து வந்த சூரி வயிற்று பசிக்காகவும் கை செலவுக்காகவும் லாரிக்கு மணல் அள்ளி கொட்டும் வேலையையும் செய்து இருக்கிறார்.
இப்படி கிடைக்கும் வேலைகளை செய்து தன்னுடைய பசியை ஆற்றி வந்த சூரி அவபோது சினிமாவில் வாய்ப்பு தேடவும் ஆரம்பித்தார். அந்த வகையில் ஆர்யா நடிப்பில் வெளியான கல்லூரியின் கதை என்ற படத்தில் நடிகர்கள் தேர்வு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்று வந்தது. இந்த தகவலை தெரிந்து கொண்ட சூரி அந்தக் கல்லூரியின் கதை படத்தின் நடிகர்கள் தேர்வுக்கு சென்று இருக்கிறார்.
அந்த சமயத்தில் பேருந்துக்கு கூட காசு இல்லாமல் பல கிலோமீட்டர் நடந்தே சென்று இருக்கிறார். போகும் வழியில் பசியும் மயக்கம் என எதுவுமே பார்க்காமல் பல கிலோமீட்டர் நடந்து சென்று இருக்கிறார் அது மட்டுமல்லாமல் போகும் இடத்தில் டீக்கடையோ அல்லது ஹோட்டலிலோ தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு பசியை அடக்கிக் கொண்டு சாலிகிராமம் சென்று இருக்கிறார்.
ஒவ்வொருவராக ஆடிஷனரில் கலந்து கொண்டு நடித்து காண்பிக்க அடுத்ததாக நடிகர் சூரி உள்ளே சென்றார். ஆனால் அவர் நடித்துக் காண்பிக்கும் முன்பே அவர் கீழே மழுங்கி விழுந்து விட்டார். அங்கு இருந்தவர்கள் இவருக்கு என்ன ஆச்சு என்று தண்ணீரை மூஞ்சில் தெளித்து விட்டு மயக்கத்தில் இருந்து எழுப்பி உங்களுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டிருக்கிறார்கள்.
அதன் பிறகு இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்ததால் தான் எனக்கு மயக்கம் வந்துவிட்டது அதை விடுங்க சார் நான் நடித்துக் காட்டுகிறேன் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் அங்கு இருந்தவர்கள் சூரிக்கு சாப்பாடு மட்டும் வாங்கி கொடுத்துவிட்டு வாய்ப்பை தரவில்லை.
அதன் பிறகு சாப்பாட்டிற்காக வேறு வழியில்லாமல் ஏவிஎம் ஸ்டுடியோ முன்பு நடைபெற்று வரும் தெருக்கூத்து நிகழ்ச்சியில் வாய்ப்பு கேட்டுள்ளார் அதில் நடிகர் சூரிக்கு காமெடி வாய்ப்பு தான் கிடைத்தது. அதன் பிறகு அந்த தெருக்கூத்தில் நடித்துக் கொண்டே இருந்த சூரியின் நடிப்பை பார்த்த பல உதவி இயக்குனர்களின் பார்வை அவர் மீது பட்டது. அதன் பிறகு பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது இப்படி பல போராட்டத்திற்குப் பிறகு வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சி மூலம் பரோட்டா சூரியாக மாறினார் சூரி.
தற்போது அவர் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் தற்போது கதாநாயகனாகவும் இரண்டு திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதில் ஒன்றுதான் விடுதலை இந்த திரைப்படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.