அன்னையர் தினத்தில் அனைத்து அம்மாகளுக்கும் வாழ்த்து கூறிய சூரி.! உருக்கமான பதிவு.!

soori-tamil360newz
soori-tamil360newz

தமிழ்சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூரி காமெடியில் விவேக் ,சந்தானத்திற்கு பிறகு சிறந்த காமெடியை தற்போது நமக்கு அளித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. இவர் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த நினைவிருக்கும் வரை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் சிறுசிறு காட்சிகளில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தாலும் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு மூலம் தான் அவர் பிரபலமடைந்தார் இப்படத்தில் பரோட்டா காமெடி ரசிகர் மத்தியில் இன்றளவும் பிடித்த காமெடியாக இருந்து வருகிறது இதனாலேயே சூரி அவர்களை பரோட்டா சூரி என்று அழைக்கப்படுகின்றனர்.

இதனை அடுத்து அவர் சுந்தரபாண்டியன் ,மனம் கொத்தி பறவை ,வேதாளம், தேசிங்குராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், நய்யாண்டி, நிமிர்ந்து நில், மான் கராத்தே, ரஜினிமுருகன் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக  வீட்டிலேயே முடங்கி உள்ள சூரி பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக அவ்வப்பொழுது தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்திய வந்தார்.

இந்த நிலையில் நேற்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது சினிமா பிரபலங்கள் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை வீடியோ மற்றும் போட்டோ கால் மூலம் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை கூறிவந்தனர். அதே போல சூரிய அவர்களும் தனது தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார்

அவர் உலகத்தில் உள்ள அனைத்து தெய்வங்களும் ஒரே உருவத்தில் தெரிகிறார்கள் என்றால் அது நம் தாய் தான் இருக்க முடியும் அத்தனை அம்மாக்களுக்கும் என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்கள் என பதிவிட்டார்