காமெடி நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகிய தற்பொழுது ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் தான் நடிகர் சூரி.இவர் சமீபத்தில் விருமன் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் கலந்துகொண்டு பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகிவுள்ளது.
நடிகர் கார்த்திக் தமிழில் 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற சூப்பர் ஹிட்டானது எனவே இவருக்கு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன்,பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன், பிரியாணி, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், என தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை தந்த இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு நல்ல பெயரை பெற்றுள்ளார்.
மேலும் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்று வருகிறது.இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். முத்தையா பெரும்பாலும் கிராமத்து பின்னணி இருக்கும் திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வமுடையவர்.
அந்த வகையில் கொம்பன்,மருது, தேவராட்டம்,புலிக்குத்தி பாண்டி போன்ற பல ஹிட் திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கார்த்திக் நடித்துள்ள விருமன் திரைப்படத்தினை சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரன் என பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.
மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக புதுமுக நடிகையான அதிதி சங்கர் நடித்துள்ளார். இவர் பிரமாண்ட இயக்குனரின் ஷங்கரின் இளைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இந்த பாடல்கள் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தை ரிலீஸ்சாக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் மிகவும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் கார்த்திக் சூர்யா அதிதி சங்கர் உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட சூரி பேசும்பொழுது அண்ணா சூர்யா பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.
#CinemaUpdate | “1000 கோயிலை விட ஒருவரை படிக்கவைப்பது பெரிது!” – விருமன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி நெகிழ்ச்சி! #SunNews | #VirumanAudioLaunch | #Karthi | #AdithiShankar | #Suriya | #soori pic.twitter.com/98Jya2UsYi
— Sun News (@sunnewstamil) August 3, 2022
ஆயிரம் கோவில்களை கட்டுவதை விட ஆயிரம் சத்திரம் கட்டுவதை விட ஒருவரை படிக்க வைப்பது பல ஆண்டுகள் பேசும் அதை அவர் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதற்காக சூரியா அண்ணனுக்கு நன்றி அவர் மட்டுமல்லாமல் அவரின் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் குழந்தைகளின் படிப்பிற்காக உதவி செய்து வருகிறார்கள்.
அப்புறம் என்ன மயிருக்குடா ஹோட்டலா கட்டி திறந்துகிட்டு இருக்க… எல்லோரையும் படிக்க வைக்க வேண்டியது தானே…!!! சர்ச் மசூதி எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாத…!!! 81 கோடி நினைவுச்சின்னம் உங்க கண்ணுக்கு தெரியாத புரோட்டா…!!! pic.twitter.com/bI6hmQzrZv
— Rajini Checkpost (@RajiniCheckpos3) August 3, 2022
தற்பொழுது நாடு முழுவதும் இது பேசத் தொடங்கி இருக்கிறது என்று சூரி பேசியது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிய வருகிறது.இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக அனைவரும் சூரியை கிண்டல் செய்து வருகிறார்கள்.