இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அண்மையில் கூட சூரி, விஜய் சேதுபதி வைத்து எடுத்த திரைப்படம் விடுதலை. இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட குழு முடிவு செய்தது அதன்படி முதல் பாகம் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியானது படம் முழுக்க முழுக்க போலீசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடக்கும்..
பிரச்சனை வெளிப்படையாக காட்டியது. குறிப்பாக போராட்டக்காரர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டியது இதனால் இந்த படம் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தற்போது தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது படத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியவர்களை தொடர்ந்து சேத்தன்..
வேல்ராஜ், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜூவ் மேனன், பவானி ஸ்ரீ மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் சூப்பராக நடித்து மக்கள் மனதில் கைத்தட்டல் வாங்கினர் தொடர்ந்து இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது ஆம் இந்த படம் இதுவரை 30 கோடிக்கு மேல் வசூலலில் உள்ளது.
இந்த வெற்றியை விடுதலை படக்குழு பெரிய அளவில் கொண்டாடியதோடு மட்டுமல்லாமல் வெற்றிமாறன் உதவி இயக்குனர்களுக்கு ஏற்கனவே செங்கல்பட்டு அருகில் உள்ள ஒரு இடத்தில் தலா ஒரு கிரவுண்ட் வாங்கி கொடுத்த நிலையில் அண்மையில் தங்க காசும் கொடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்து வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விடுதலை பார்ட் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இணையதள பக்கத்தில் ஒரு தகவல் உருவாகிறது அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி விடுதலை படத்தின் பார்ட் 2 படம் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.