மேடையே அலரும் அளவிற்கு “வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனம் ஆடிய இந்திய கிரிக்கெட் வீரர்..!

suresh-raina
suresh-raina

suresh vaththi comming dance video: பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மாஸ்டரின் திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக தளபதி விஜய் அவர்கள் நடித்துள்ளார் மேலும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், சஞ்சீவ் ,ஸ்ரீமான், ஸ்ரீநாத், கௌரி கிஷன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது வெகு நாட்களாக குரானா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வெளிவராமல் இருந்தது பின்னர்  பல்வேறு கட்டுப்பாட்டின் படி ஜனவரி 14ஆம் தேதி வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மேலும் இந்த பிரமாண்டமான திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் பல்வேறு பாடல்கள் இடம் பெற்றுள்ளது இந்த பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்டடித்த அதுமட்டுமல்லாமல் ரசிகர் மத்தியில் மாறாத ஒரு பாடலாக அமைந்துவிட்டது.

இந்நிலையில் கல்லூரி முதல் பள்ளி வரை அனைத்து மாணவர்களும் வாத்தி கம்மிங் என்னும் பாடலை மிகவும் உற்சாகத்துடன் கேட்டு மகிழ்ந்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த பாடலுக்கு கூட நடிகர் விஜய் கூட இசை வெளியீட்டு விழாவில் கூட நடனம் ஆடியுள்ளார்.

இந்நிலையில் மீடியா சார்பாக இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா விற்கு ஒரு விருது வழங்கப்பட்டது இந்த விருதினை லோகேஷ் கனகராஜ் அவர்கள்தான் சுரேஷ் ரைனாவிற்கு வழங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அப்பொழுது இந்த மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் இந்த வீடியோவானது சமீபத்தில் டுவிட்டரில் மிக வைரலாகி வருகிறது.