இந்திய அணிக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் தான் சுரேஷ் ரெய்னா இவரைப் பற்றி பரபரப்பான ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த தகவல் என்னவென்றால் சுரேஷ் ரெய்னா மும்பையிலுள்ள ட்ராகன் ஃபிளை கிளப்பில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் ஆனால் அங்கு கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டுமென கடுமையான உத்தரவு அரசாங்கம் போட்டதையடுத்து கொரோனா விதிமுறைகளை மீறியதால் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை விமான நிலையம் அருகே உள்ள ட்ராகன் ஃபிளை கிளப்பில் சுரேஷ் ரெய்னா திங்கள் அன்று கேளிக்கை விருந்து ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் ஆனால் அங்கு கோவை19 விதிமுறைகள் பலவிதமான கட்டுப்பாடுகளுடன் இரவு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன டிசம்பர் 22 முதல் ஜனவரி 15 வரை இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்.
கொரோனா விதிமுறைகள் கடுமையாக விதிக்கப்பட்டதையடுத்து சுரேஷ் ரெய்னா கேளிக்கை விருந்தில் கலந்துகொண்டதால் சோதனை கொண்ட மும்பை போலீசார் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் 34 பேரை காவலில் வைத்தனர் அதுமட்டுமல்லாமல் சுரேஷ் ரெய்னா பாடகர் குரு ரந்தவா ஆகிய இருவரும் கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக சட்டப்பிரிவு 188 கீழ் கைது செய்யப்பட்டு வழக்கில் மாட்டி கொண்டார்கள்.
இந்நிலைக்கு சுரேஷ் ரெய்னா ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
மேலும் ட்ராகன் ஃபிளை கிளப் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி திறந்துவைத்ததால் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனையடுத்து சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டது அவரது ரசிகர்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.