சினிமா உலகில் மாறுபட்ட மற்றும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது நடிகர் சூர்யாவுக்கு மிகவும் பிடிக்கும் அப்படித்தான் அவரது திரைப்படங்கள் இதுவரையிலும் இருந்து வந்துள்ளன.
யாரும் எதிர்பார்க்காத மாறுபட்ட கதை களத்தில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார் சமீபத்தில் கூட வெளியான திரைப்படம் தான் சூரரைப்போற்று இந்த திரைப்படத்தில் நடிப்பில் பின்னி பெடல் எடுத்தார்.இப்படத்தை சுதா கொங்கராவ் என்பவர் இயக்கியிருந்தார்.
படம் திரையரங்கில் வெளியாகாமல் மாறுதலாக OTT தளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்தடுத்து பல முக்கிய படங்களில் நடிக்க இருப்பதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்பொழுது உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த நிலையில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த சூரரை போற்று படத்தின் ரீமேக் ஹிந்தியில் உருவாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை சுதா கங்காரு தான் இயக்கவுள்ளார். அப்படத்தை 2டி நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இது சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த திரைப்படத்தில் ஹீரோ ரோலில் நடிக்க உள்ளவர் பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது அதாவது இந்த ரீமேக் படத்தில் டாப் நடிகர் அக்ஷய்குமார் தான் நடிக்க உள்ளாராம் என தகவல்கள் கசிகின்றன ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது இதுவரை தெரியவில்லை.