கடந்த வருடம் கொரோனா தாக்கத்தால் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்து விட்டது. அதன்பிறகு ஒரு சில திரைப்படங்கள் OTT இணையதளத்தில் நேரடியாக வெளியிட்டார்கள்.
அப்படி அமேசான் தளத்தில் வெளியான திரைப்படங்களில் இந்திய அளவில் அதிக பார்வையாளர்களை கடந்த திரைப்படங்களின் லிஸ்டில் இரண்டாவது இடமாக சூரரைப்போற்று இருந்தது. ஆனால் அந்த திரைப்படத்தை மாஸ்டர் திரைப்படம் தட்டி தூக்கி ஒரு சில நாட்களிலேயே ஓரங்கட்டி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஆரம்ப காலகட்டத்தில் சூரரை போற்று திரைப்படமும் மாஸ்டர் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி நேரடியாக மோதிக் கொள்ள இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இரண்டு திரைப்படங்களும் சூழ்நிலை காரணமாக வெவ்வேறு தேதிகளில் ரிலீஸகியுள்ளது.
இந்தநிலையில் சூரரைப்போற்று திரைப்படம் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படத்தை சூர்யா தயாரித்து இருந்தார் அதனால் எந்த ஒரு ரிஸ்க்கும் எடுக்காமல் படத்தை நேரடியாக அமேசான் தளத்தில் வெளியிட்டார்கள் படமும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
ஆனால் தளபதி விஜய் எவ்வளவு நாள் ஆனாலும் படத்தை திரையரங்கில் தான் ஒளிபரப்ப வேண்டும் என பிடிவாதமாக இருந்தார் அதனால் பொங்கல் தினத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது எதிர்பார்க்காத வகையில் மாஸ்டர் திரைப்படம் ஏகப்பட்ட வசூலை வாரி குவித்தது என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இரண்டாவது வாரமே அமேசான் நிறுவனத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது.
அதேபோல் அமேசான் நிறுவனம் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திற்கும் இப்படி ஒரு புரமோஷன் செய்ததே இல்லை அந்த அளவு மிகப்பெரிய அளவிற்கு பிரமோஷன் செய்தார்கள். நேரடியாக அமேசான் தளத்தில் வெளியிடுவது போல் மிகப்பெரிய அளவிற்கு ப்ரோமோஷன் செய்தார்கள்.
இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியான ஒரு சில தினங்களிலேயே சூரரைப்போற்று திரைப்படத்தின் மொத்த பார்வையாளர்களையும் கடந்து விட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படத்தை இதுவரை 66 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக புள்ளிவவரங்கள் தெரிவித்துள்ளார்கள்.
இருந்தாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.