எழுத்தாளர் சுரா தன்னுடைய திரையுலக அனுபவங்களை சமீபத்தில் பிரபல youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார் அந்த வகையில் அந்த பேட்டியில் மறைந்த ரகுவரன் குறித்து அவர் பேசிய தகவல் வைரலாகி வருகிறது.
அவர் கூறியதாவது சில நடிகர்களை பார்த்தால் அவர்கள் மீது தானாகவே மதிப்பும் மரியாதையும் வந்துவிடும் அந்த வகையில் என் வழி தனி வழி என படப்பிடிப்பு தளத்தில் ரகுவரன் நடந்து கொண்ட விதம் குறித்துஅவர் பேசியுள்ளார். ரகுவரன் நடந்து கொண்டதை உங்களுக்கு கூறுகிறேன் என கூறியுள்ளார் அதாவது ரகுவரன் 30 ஆண்டுகளுக்கு முன்பு வில்லனாக நடித்துக் கொண்டிருந்தார் அப்பொழுது முதன் முறையாக கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.
“என் வழி தனி வழி” படத்தில் ரகுவரனை நாயகனாக ஒப்பந்தம் செய்திருந்தார்கள் அந்த திரைப்படத்தில் ரகுவரனுக்கு ஜோடியாக பானுப்ரியாவின் தங்கை சாந்தி பிரியா நடித்தார். இந்த திரைப்படத்தை பூக்களை பறிக்காதீர்கள். பூமழை பொழியுது உள்ளிட்ட படங்களை இயக்கிய நீ அழகப்பன் தான் இந்த திரைப்படத்தை இயக்கினார்.
படத்தில் ரகுவரன் நேர்மையான இளம் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நேர்மையான வக்கீலாக இருப்பதால் இவருக்கு பெரிதாக வழக்குகள் வராது அதனால் பகலிலேயே குடிக்க ஆரம்பித்து விடுவார், வக்கீல் உடையான வெள்ளை சட்டை மற்றும் கருப்பு கோர்ட்டில் குடிக்க ஆரம்பிக்கிறார் ஒரு காலகட்டத்தில் நடுரோட்டில் விழுந்து கிடப்பார் இந்த செயலை ரகுவரனின் அக்கா தட்டி கேட்பது போல் காட்சிகள் படம் பார்க்கப்பட்டது.
அப்பொழுது இந்த காட்சியை டி நகர் உஸ்மான் ரோட்டில் ஒரு மொட்டை மாடியில் படமாக்கி கொண்டிருந்தார்கள் இரவு காட்சி என்பதால் எடுத்துக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது ரகுவரனின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படும் அக்கா ரகுவரனை ஓங்கி கன்னத்தில் அறைவது போல் காட்சி எடுக்க வேண்டும். அப்பொழுது ரகுவரனை அடிக்க மெல்ல கை ஓங்குவார் அதைப் பார்த்த இயக்குனர் உங்கள் தம்பி எதிர்காலத்தை நினைத்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் அப்படி என்றால் எவ்வளவு கோபத்தோடு அடிக்க வேண்டும் என தெரிகிறதா எனக் கேட்டுள்ளார்.
இமான் பிரச்சனை பற்றி இனி யாரும் பேச மாட்டாங்க.! ஏன்னா சிவகார்த்திகேயன் செய்த செயல் அப்படி..
பிறகு நல்ல அடித்துள்ளார் இது பத்தாது என மீண்டும் அடிக்க வைத்தார் இப்படி நான்கு டேக்குகள் ரகுவரன் கன்னத்தில் அடிக்க வைத்தார் இயக்குனர். அக்கா கதாபாத்திரத்தில் கீதா என்ற நடிகை நடித்திருந்தார் அந்த சீன் முடிந்ததும் ஓரமாய் உட்கார்ந்து கீதா அழுது கொண்டிருந்தார் ரகுவரனை அடித்ததை நினைத்து அழுது கொண்டிருந்தவரை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் பாபு அவரை தேற்றினார்கள் இது படம் தான் எதற்காக அழுகிறீர்கள் என பேசினார்கள்.
அடுத்த நாள் காலையில் நுங்கம்பாக்கம் ஒரு ஹோட்டலில் பேசிக்கொண்டிருந்தோம் அப்பொழுது நடிகர் ரகுவரன் சிரித்துக் கொண்டே ஒரு விஷயத்தை கூறினார் நான் சில முறை ஒழுங்காக கால் சீட் கொடுக்காததை மனதில் வைத்துக் கொண்டு இயக்குனர் அழகப்பன் என்னை நேற்று பழி வாங்கி விட்டார் அதனை மனதில் வைத்துக் கொண்டுதான் கீதாவை வைத்து இத்தனை முறை அரைய வைத்தார் என சிரித்துக் கொண்டே பேசினாராம்.
23 வயது இளம்பெண்ணை வளைத்து போட்டு தனிமரமான பப்லுவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?
பேசிவிட்டு ஒரு தம்பி தவறு செய்தால் அக்கா கண்டிக்க வேண்டும் தான் நான் அவருடைய தம்பி தானே அவர் அடித்ததில் என்ன தப்பு என கதாபாத்திரத்தோடு ஒன்றி வாழ்ந்தாராம். அந்தப் படம் முடியும் வரை அவர்தான் என்னுடைய அக்கா என ரகுவரன் கூறிய வார்த்தைகள் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என் காதில் என பத்திரிக்கையாளர் சுரா சமீபத்தில் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.