“சுறா” படம் ஓடாதுன்னு எனக்கு அப்பவே தெரியும்.. தில்லாக பல வருடம் கழித்து உண்மையை கூறிய பிரபல நடிகை

sura
sura

Sura movie : சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்திலிருந்து காவாலா என்ற பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கின்றன. இந்த பாடல் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே எண்ணற்ற பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இந்த பாடலில் தமன்னாவின் கிளாமர் டான்ஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

மேலும் இந்த காவாலா பாடலுக்கு சினிமா பிரபலங்கள் முதற்கொண்டு ரசிகர்கள் வரை பலரும் ரீல்ஸ் வீடியோ செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை பெற்று வருகின்றன. காவாலா பாடல் மூலம் ட்ரெண்டிங்கில் இருக்கும் தமன்னா ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.

மேலும் நடிகர் அஜித் அடுத்து நடிக்க உள்ள விடாமுயற்சி படத்திலும் தமன்னா தான் ஹீரோயின் என்ற சில பேச்சிகளும் அடிபட்டு வருகின்றன. இந்த நிலையில் நடிகை தமன்னா சமீபத்திய பேட்டி ஒன்றில் சுறா படத்தில் நடித்தது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

தமன்னா சுறா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அந்த படம் ஓடாது என்று எனக்கு தெரியும் என வெளிப்படையாக பேசி அதிர வைத்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டில் எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் விஜய், தமன்னா, வடிவேலு போன்றோர் நடிப்பில் வெளியாகி சுமாரான வரவேற்பை கண்ட திரைப்படம் சுறா.

இந்த படத்தில் நடிக்கும் போது படம் சரியாக வராது என என் உள் உணர்வு சொன்னது. சுறா படத்தில் நான் நடித்தது தவறு, இந்த படம் கண்டிப்பா ஃபிளாப் என தெரிந்தும் வேறு வழி இல்லாமல் நான் நடித்து கொடுத்தேன். ஒரு படத்தில் கமிட் ஆகி விட்டால் அந்த படத்தில் நடித்து முடிப்பது நடிகர்களின் கடமை அப்படித்தான் நானும் சுறா படத்தில் நடித்தேன்.

பல படங்களில் நடிக்கிறோம் பல படங்களை பார்க்கிறோம் எனவே ஒரு படத்தில் நடிக்கும் போது இந்த படம் சரியாக ஓடும் அல்லது கூடாது என்ற விஷயம் நமக்குத் தெரிந்துவிடும் ஆனால் அப்பொழுது என்னால் அதை தைரியமாக சொல்ல முடியாமல் நடித்தேன் இனி அது போன்ற படங்களில் நடித்து உங்களை டார்ச்சர் பண்ண மாட்டேன் என வெளிப்படையாக கூறுகிறார்.