நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சினிமாவில் முன்னணி நடிகரின் படம் வெளியானால் ரசிகர்கள் பாலாபிஷேகம், வெடி, மேளதாளம் என விமர்சயாக கொண்டாடுவார்கள். அதிலும் சென்னையை பொறுத்தவரை முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றாலே திரையரங்கு திருவிழா போல் காட்சியளிக்கும்.
இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் உள்ள திரையரங்கில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராம் முத்துராம் சினிமாஸ் திரையரங்கம் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது அதுமட்டுமிலலாமல் இந்த திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து நடிகர்களும் சேர்ந்து படம் பார்க்க பிடிக்கும் அந்த வகையில் திருநெல்வேலியில் முன்னணி நடிகர்களின் படங்களை விட தளபதி விஜயின் திரைப்படங்கள் எதிர்பார்த்ததைவிட அளவுக்கு அதிகமாக வசூல் செய்யும்.
அதிலும் மாற்ற திரையரங்கில் தோல்வியடையும் திரைப்படங்கள் கூட ராம் சினிமா திரையரங்கில் வெற்றி அடைந்து விடும். அந்த அளவிற்கு சமூக வலைதளத்திலும் நேரடி விளம்பரங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ராம் சினிமாஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் நல்ல லாபத்தை ஈட்டி கொடுத்ததாக அறிவித்துள்ளார்கள் அதனை கிண்டல் செய்யும் விதமாக பல ரசிகர்கள் கேலி செய்துள்ளார்கள்.
அதிலும் ஒரு ரசிகன் கிண்டல் செய்யும் விதமாக மோசமாக கிண்டலடித்துள்ளார். அதாவது அந்த ரசிகர் தோல்வியடைந்ததை எப்படியெல்லாம் மறைகக போராடுகிறார்கள் என கூறியுள்ளார் அதற்கு ராம் சினிமாஸ் அதிரடியாக தக்க பதிலடி கொடுத்துள்ளது இந்த பதிலை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
அதாவது ராம் சினிமா நிறுவனம் கூறியதாவது நீங்கள் பிளாப் என்று கதறுற சுறா படமே எங்களுக்கு நல்ல லாபம்தான் என தரமான பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிலடி விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்