Bigboss 6 : என்னுடைய அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணுங்க.. பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போட்ட உருக்கமான பதிவு.!

bigboss-
bigboss-

மக்களுக்கு ஒரு நிகழ்ச்சியை பிடித்து விட்டால் அதை அடுத்தடுத்து எதிர்பார்ப்பார்கள் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பலருக்கும் பிடித்து போன நிகழ்ச்சி. இதுவரை பிக் பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக முடிந்திருக்கிறது ஆறாவது சீசனை மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருந்த..

நிலையில் தற்போது பிக் பாஸ் 6 வது சீசனும் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இன்றிலிருந்து 100 நாள் பிக்பாஸ் நிகழ்ச்சியை மக்கள் மற்றும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.. இந்த சீசனில் மொத்தம் 20 பேர் கலந்து கொள்கின்றனர் அதில் 10 பெண்கள் 9 ஆண்கள் ஒரு திருநங்கைஎன்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஒரு சிலர் அடுத்தடுத்த நாட்களில் சப்ரைசாக உள்ளே என்ட்ரி கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாயகன் கமலஹாசன் தான் இந்த நிகழ்ச்சியையும் சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்க இருக்கிறார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவருக்கு சம்பளமாக 75 கோடி பேசப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன இந்த பிக் பாஸ் சீசன் 6 ல் பல முக்கிய பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளனர் அவர்களின் ஒருவராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனும் போட்டியாளராக பங்கேற்க உள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு தகவலை கொடுத்துள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்.. அண்ணனுடைய புகைப்படத்தை வெளியிட்டு ரொம்ப ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கு.. ரொம்ப ரொம்ப எமோஷனலாவும் இருக்கு.. என் அண்ணன் இப்பொழுது பிக் பாஸ் ஆறு நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார் அவரை நான் புஜ்ஜின்னு தான் கூப்பிடுவேன்..

aishwarya rajesh
aishwarya rajesh

சகோதரன், நண்பன், அப்பா, என எனக்கு எல்லாமே அவர் தான் கண்டிப்பாக அவனை சில நாட்கள் நான் மிஸ் பண்ணுகிறேன் ஆனால் நான் அவனுக்கு சொல்ல விரும்புவது எல்லாம் வாழ்த்துக்கள் தான் பிக் பாஸ் மூலம் வெற்றிகரமாக திரும்பி வரவேண்டும் இந்த வாய்ப்பை தந்த விஜய் டிவிக்கு நன்றி எங்கள் அண்ணன் புஜ்ஜிக்கு ஆதரவளியுங்கள் என பதிவிட்டு இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.