“தலைவி” படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் .! பின்னர் இயக்குனருக்கு ஷாக் கொடுத்த ரஜினி.? என்ன நடந்தது தெரியுமா.?

rajini-and-thalaivi-
rajini-and-thalaivi-

தமிழ் சினிமாவில் பல்வேறுவிதமான சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு நிலையான பெயரை பெற்றவர் இயக்குனர் ஏ எல் விஜய். இவர் தற்பொழுது கங்கனா ரனாவத் மற்றும் அரவிந்த் சாமியை வைத்து “தலைவி” என்ற படத்தை எடுத்து இருந்தார்.

இந்த படம் முழுக்க முழுக்க மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை எடுத்துரைக்கும் படமாக இது இருந்தது. இந்த படம் இந்தியா முழுவதும் 1500 திரையரங்கிலும் மற்றும் வெளிநாட்டில் 200 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது படம் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பை எகிற வைத்து.

இந்த நிலையில் நல்ல வசூலையும் தட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் கோட்டை விட்டுள்ளது. தலைவி படம் முதல் நாள் வசூலாக தமிழகத்தில் மட்டும் சுமார் 50 லட்சத்தை கூட தாண்டவில்லை என கூறப்படுகிறது.

இதனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தும் என்பது தற்பொழுது சினிமா பிரபலங்கள் மற்றும் மக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. ஒரு சில பிரபலங்கள் தலைவி  திரைப்படத்தைப் பார்த்து தனது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அண்மையில் இந்த திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தார் மேலும் தலைவி படத்தின் இயக்குனர் விஜய்க்கு போன் செய்து படத்தில் நடித்த நடிகர் நடிகைகளையும் மற்றும் பணிபுரிந்த கலைஞர்களையும் வெகுவாக வாழ்த்துவதோடு இயக்குனர் விஜய்யை புகழ்ந்து பேசினார். இச்செய்தி தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் தீயாய் பரவி வருவதோடு ரசிகர்கள் கொண்டாடியும் வருகின்றனர்