பொதுவாக சினிமாவில் நடிகைகள் குறிப்பிட்ட வயது வரையும் தான் முன்னணி நடிகைகளாக இருக்க முடியும் ஆனால் நடிகர்களுக்கு அப்படி இல்லை 60 வயது ஆனாலும் கூட முன்னணி நடிகர்களாக சினிமாவில் தொடர்ந்து இருக்க முடியும்.
அந்த வகையில் சொட்டையானாளும் கூட விக் வைத்து மறைத்துக் கொண்டு இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.
இவர் சினிமாவையும் தாண்டி தற்போது அரசியலிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் அரசியல் மற்றும் படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த இத்திரைப்படத்தில் முன்னணி நடிகைகளான குஷ்பு மற்றும் மீனா ஆகிய இருவரும் நடித்து வருகிறார்கள்.
இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகளான நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் காமெடி நடிகர்களான சூரி, சதீஷ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க டி இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதால் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இப்படத்தைப் பற்றி சன் பிக்சர்ஸ் ரஜினி எப்பொழுது படப்பிடிப்பை தொடங்கலாம் என்று கூறுகிறாரோ அப்போதுதான் என்று தெளிவாக கூறியிருந்தார்கள். இந்நிலையில் ரஜினி நேரடியாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சென்று பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.அந்த வகையில் மார்ச் 15ஆம் தேதி அண்ணாத்த படக்குழுவினருடன் ரஜினி இணைய உள்ளாராம்.
ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்தவுடன் பொள்ளாச்சியில் ஒரு சில காட்சிகள் எடுக்க வேண்டியது உள்ளதாம். இப்படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.