தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் தளபதி விஜய். இவர் தற்பொழுது இளம் இயக்குனரான நெல்சன் திலிப்குமார் உடன் முதல் முறையாக கைகோர்த்து பீஸட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் சூட்டிங் வெளிநாடு மற்றும் இந்தியாவை சுற்றி எடுக்கப்பட்டுள்ளது வந்தது கடைசியாக கூட டெல்லியில் படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் சில காட்சிகளை எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் படக்குழு அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக தற்போது ரஷ்யா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படியிருக்க படக்குழு மற்றொரு பக்கத்தில் இன்றும் டாப் நடிகர்களை படத்தின் கதைக்கு ஏற்றவாறு தட்டி தூக்கி தான் வருகிறது. இதனால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிக அளவில் எகிரி உள்ளது. பீஸ்ட் திரைப்படம் அடுத்த வருடமும் ஒரு நல்ல நாளில் வெளியாகும் என கூறப்படுகிறது ஆனால் பீஸ்ட் படம் நிச்சயம் பொங்கலுக்கு வெளியாகாது என அடித்து கூறப்படுகிறது.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் நடித்த ஒரு படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் துவங்கி வைத்துள்ளார். அதுவும் எப்படி துவங்கி வைத்தார் தெரியுமா.. விஜய் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “சந்திரலேகா”.
இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து வனிதா விஜயகுமார் நடித்திருப்பார் மேலும் இந்த படத்தின் முதல் காட்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிளாப் செய்து தொடங்கி வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.