வைகை புயல் வடிவேலு நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையில் கம்பேக் கொடுத்து நடித்து வருகிறார் முதலில் இவர் நடித்த “நாய்சேகர் ரிட்டன்ஸ்” மோசமான விமர்சனத்தை பெற்று ஓடியது இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜுடன் கூட்டணி அமைத்து “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்தார்.
இதில் வடிவேலுவின் மாறுபட்ட நடிப்பு பலரையும் கவர்ந்து இழுத்தது. இதனால் பலரும் மாமன்னன் படத்தை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் அதன் காரணமாக வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து வடிவேலு பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்தும் வருகிறார். இந்த நிலையில் திரை விமர்சகர் அந்தணன் வடிவேலு மற்றும் ரஜினி பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அவர் சொன்னது ரஜினி, வடிவேலு காம்போவில் வெளியான அதிரடி திரில்லர் திரைப்படம் தான் சந்திரமுகி இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் சந்திரமுகி படத்தில் முதல் பாகத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் அல்டிமேட் ஆக இருக்கும் அதில் இவர்கள் இருவரும் சேர்ந்து செய்த லூட்டி பார்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது..
ஆனால் சந்திரமுகி படத்தின் படபிடிப்பை துவங்குவதற்கு முன் படக்குழுவினர் ரஜினியை சந்தித்தபோது அவர் முதலில் வடிவேலு அவர்களிடம் கால் சீட்டை வாங்கி வீட்டு வாருங்கள் அதன் பிறகு என்னிடம் வரலாம் என்று திருப்பி அனுப்பி விட்டாராம் ஆனால் அந்த சமயம் வடிவேலு ரொம்ப பிஸியாக நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
இதை ரஜினியிடம் படக்குழுவினர் தெரியப்படுத்தினர் அப்படியும் ரஜினி நீங்கள் வடிவேலுவை படப்பிடிப்பு தளத்திற்கு கொண்டு வரும் வரை நான் வேறு எந்த படத்திற்கும் சொல்ல மாட்டேன் அவருக்காக காத்திருப்பேன் என்று வைகைபுயல் வடிவேலு காஸ் ஷீட் வரும் வரை அவருக்காக ரஜினிகாந்த் காத்திருந்தார். இருப்பினும் இதைப்பற்றி ஒரு நாள் கூட ரஜினி பெரிதுப்படுத்தி பேசியதில்லை.
ஆனால் வடிவேலு அவருடைய மருமகன் தனுஷின் மாப்பிள்ளை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது உன்னுடைய மாமனார் ரஜினிக்கு நான் தான் நடிப்பு கற்றுக் கொடுத்தவன் என்று புகழ் போதையில் ஓவர் தெனவட்டுடன் பேசியதால் அந்த படத்தில் இருந்து அவர் தூக்கப்பட்டார் அதன் பிறகு தான் வடிவேலுவுக்கு பதில் விவேக் அந்த படத்தில் கமிட்டாகி நடித்தார் இந்த விஷயத்தை தற்போது அந்தணன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.