இணையதளத்தில் வைராகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளம் வயதில் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம்.

rajinikanth1
rajinikanth1

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நபர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது வரையிலும் தமிழ் சினிமாவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார். இருப்பினும் அத்தகைய இடத்தை பிடிக்க பல இளம் நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் அதனையெல்லாம் தனது நடிப்பு திறமையின் மூலம் தவிடுபொடியாக்கி  அந்த இடத்தை யாரும் கை படாத வகையில் தக்க வைத்துக் கொண்டு வருகிறார். இவர் தமிழ் சினிமா உலகில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அதன் மூலம் இவர் நம்பர் 1 ஆக இருந்து வருகிறார்.

மேலும் இவருக்கு என பல கோடி ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது அரசியல் பக்கமும் திசை திரும்பி உள்ளதால் இவருக்கு மேலும் மக்களின் ஆதரவு அதிகரித்து உள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும் படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக தர்பார் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவாவுடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

இத்திரைப்படத்தில் இவருடன் இணைந்து பல முன்னணி பிரபலங்கள் நடிக்கின்றனர். அந்தவகையில் மீனா, குஷ்பூ மற்றும் நயன்தாரா கீர்த்தி சுரேஷ் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். இதனால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் இத்திரைப்படம் எப்போது வெளிவரும் என்பதே கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதால் படத்தின் ஷூட்டிங் தாமதமாகி உள்ளதால் இப்படம் எப்போது வெளிவரும் என்பது கேள்வி குறியாக இருந்து வருகிறது. இருப்பினும் அவரது ரசிகர்கள் இந்த ஊரடங்கு உத்தரவு அவரைப் பற்றிய செய்திகளை ஏதேனும் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இவர் இளம் வயதில் எடுத்து கொண்ட அரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ரஜினி தனது நண்பர்களுடன் இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.

rajinikanth
rajinikanth