80, 90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி இன்று வரையிலும் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இப்பொழுது கூட அந்த நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டு சிறப்பாக ஓட காரணம் அவர் நடிக்கும் மாஸ் திரைப்படங்கள் மட்டுமே என கூறப்படுகிறது.
திரைப்படங்களில் காமெடி ஆக்ஷன் சென்டிமெண்ட் என அனைத்தும் பொருந்துவதால் ரசிகர்களையும் தாண்டி பொதுவாக மக்களையும் கவர்ந்து இருக்கிறார் ரஜினி. அப்படி இப்பொழுது கூட நடித்து வருகிறார் இதனால் அவரது இடத்தை பிடிக்க முடியாமல் அஜித் , விஜய் போன்ற டாப் நடிகர்களே திணறி வருகின்றனர்.
கடைசியாக அவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் நல்லதொரு வெற்றி பெற்றதை.. தொடர்ந்து ரஜினி அடுத்ததாக சிறந்த இயக்குனர்கள் கதை கேட்டு அடுத்தடுத்த இயக்குனர்களை தேர்வு செய்து வருகிறார் அந்த வகையில் ரஜினியின் 169 திரைப்படத்தை இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார்.
அந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார் அவரை தொடர்ந்து 170 படத்திற்கான இயக்குனரையும் செலக்ட் செய்து வருகிறார். ரஜினி வயதானாலும் தொடர்ந்து சினிமா உலகில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். தலைவருக்கு சினிமா மீது பற்றுள்ள அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் அண்மைகாலமாக டாப் நடிகர், நடிகைகள் குழந்தை வரும் பிரம்மாண்ட வீட்டை நாம் பார்த்து வருகிறோம் அந்த வகையில் கூட அஜித், விஜய் அவர்களின் வீடுகளை பார்த்த நிலையில் தற்போது ரஜினி வாழ்ந்து வரும் வீடு தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ செம்ம மாஸ்ஸாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வீடு.