அவர் சொன்ன இரண்டு விஷயம்..! இன்றும் கடைப்பிடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

rajini89
rajini89

தன்னுடைய சிறந்த ஸ்டைல் மற்றும் நடிப்பின் மூலமாக தன்னை சூப்பர் ஸ்டாராக ரசிகர் மத்தியில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.  இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பிரபலமாக இருப்பதற்கு டாக்டர் கோபால் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்.

இவர்தான் சினிமாவிற்கு தேவையான வசனங்கள் டயலாக்குகள் உச்சரிப்பு போன்ற பலவற்றையும் கற்றுக் கொடுப்பவர் ஆவார் அந்தவகையில் இன்று முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களுக்கும் இவர் தான் நடிப்பு கற்றுக் கொடுத்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஒருமையில் பெயர் சொல்லிக் கூப்பிடும் ஒரு சிலர் மத்தியில் இவரும் ஒருவர்  அந்த வகையில் ரஜினியிடம் இவர் கூறிய இரண்டு விஷயங்களை ரஜினிகாந்த் கடைபிடித்து உள்ளார் பொதுவாக சூப்பர் ஸ்டார் என்றாலே சிகரெட்டை தூக்கிப்போட்டு வாயில் பிடிப்பதுதான் ஸ்டைல்.

இவ்வாறு அவர் திரைப்படங்களில் சிகரெட் காட்சிகள் பல உண்டு. அந்தவகையில் கோபாலி ஒரு முறை ரஜினியிடம் சிகரெட்டை விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டபோது அவருடைய பேச்சுக்கு மரியாதை கொடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகரெட் பழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்து விட்டாராம்.

அதேபோல மக்களுக்கு உதவ வேண்டுமென கோபாலி சொன்ன வார்த்தையில் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தினமும் 750 பேருக்கு உணவு அளித்து வருகிறார். ஆனால் இந்த விஷயத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு என்றும் பெருமை கொண்டது கிடையாது.