தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற கௌரவத்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நடிகர் திரை உலகில் முதன் முதலாக எதிர்மறையான கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார் அதன்பிறகு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததை தொடர்ந்து தற்போது முன்னணி நடிகராகவும் நம்பர் ஒன் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் சில தோல்விகளை சந்தித்தாலும் அவருடைய திரைப்படங்கள் வசூலில் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
அதுமட்டுமில்லாமல் இயக்குனர் நெல்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி ஆகிய இருவரும் இந்த திரைப்படத்தில் இணைவது ரசிகர்களுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது மட்டுமில்லாமல் நடிகர் ரஜினிகாந்த் புதுமுக இயக்குனருக்கு இப்படி ஒரு வரவேற்பு தந்துள்ளார் என பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் ரஜினிகாந்திற்கு ஒரு திரைப்படம் பிடித்துவிட்டால் போதும் அந்த திரைப்படம் சம்பந்தப்பட்டவர் அல்லது நடிகர் படக்குழுவினர் யாரேனும் தென்பட்டால் அவரிடம் நேரில் அல்லது போனில் அந்த திரைப்படத்தை பாராட்டுவது வழக்கமான செயல்தான் அந்த வகையில் சமீபத்தில் கமல் திரைப்படத்தைப் பார்த்த ரஜினி பிரமித்து போய் விட்டாராம்.
மேலும் இந்த திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் போன் செய்து அவரை மனம் திறந்து பாராட்டிய இது மட்டுமில்லாமல் நடிகர் கமல்ஹாசனுக்கும் போன் செய்து நீண்ட நேரம் பேசி உள்ளாராம். திரை உலகில் எந்த ஒரு போட்டி பொறாமை இல்லாமல் இருக்கும் ரஜினியின் இந்த செயலை பார்த்து பலரும் வியந்து போய் விட்டார்கள்.
ஆனால் இப்படி ஒரு செயலை முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் அஜித் கூட செய்தது கிடையாது தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வேறுபட்டவர் என அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றார்கள்.