பிரபல கிரிக்கெட் வீரருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – பக்கத்துல யார் இருக்காங்க பாருங்கள்.!

rajini-

தமிழ் சினிமா உலகில் வெற்றி நாயகனாக வலம் வருபவர் நடிகர் ரஜினி. ரஜினியை அனைவரும் செல்லமாக சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுவது வழக்கம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார்.

இப்பொழுது வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து அசத்துகிறார் அந்த வகையில் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படமான ஜெயிலர் படத்தில் நடிகர் ரெடியாக உள்ளார். இது ரஜினிக்கு 169 வது திரைப்படம் ஆகும். ஜெயிலர் படத்தை இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார்.

படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், சிவகார்த்திகேயன் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த இயக்குனருடன் கதை கேட்டு உள்ளார்.

வெகு விரைவிலேயே அந்த இயக்குனர்களுடனும் கைகோர்த்து ரஜினி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி பற்றிய செய்திகள் வெளி வருவது வழக்கம் அதுபோல தற்போது ரஜினி பற்றிய பழைய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கேப்டனுமான கபில்தேவ்வை நேரில் சந்தித்தார். அப்பொழுது ரஜினி அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் அவர்களுடன் இணைந்து மறைந்த முதலமைச்சர் திரு மு கருணாநிதி அவர்களும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ நீங்களே பாருங்கள் அந்த பழைய புகைப்படத்தை..

rajini-
rajini-