வன்முறையை கையில் எடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! இனிமேதான் பழைய ரஜினியை பார்க்க போறீங்க..!

rajini
rajini

சமீபகாலமாக திரையரங்கில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களில் வன்முறையை தூண்டும் அளவிற்கு வெளிவருவது மட்டுமில்லாமல் அவை ரசிகர்களை வெகுவாக கவர வேண்டும் என்ற காரணத்தினாலும் இயக்குனர்கள் இதுபோன்ற காட்சிகளை சினிமாவில் புகுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் ஏதேனும் ஒரு திரைப்படம் வன்முறையை மையப்படுத்தி வெளிவந்து மாபெரும் வெற்றி கண்ட உடன் அதே கதையம்சம் கொண்ட வன்முறை திரைப்படங்கள் இணையத்தில் வெளி வந்து கொண்டே தான் இருக்கிறது அந்த வரிசையில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில்  உருவாகும் ஜெயிலர் பட போஸ்டர் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கையில் மிக பயங்கரமான ஆயுதம் வைத்திருப்பது மட்டுமில்லாமல் அவற்றைப் பார்க்கும்போது மிகவும் கொடூரமாக  இருப்பதாக தெரியவந்துள்ளது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் அதிக அளவு ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என அனைவரும் பல்வேறு தரப்பு மக்களும் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் பல்வேறு மக்கள் நலன் கருதி திரைப்படங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் எதிரான வன்முறைகளில் கதாநாயகனாக நடிப்பது ஏன் என கேள்வி எழும்பி வருகிறார்கள் ஆனால் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் வெற்றியடைந்த விக்ரம் திரைப்படத்தின் பாணியில் நானும் இறங்கப் போகிறேன் என்பதை தெரிவிக்கும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவு வசூல் செய்து தமிழ் நாட்டில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது இந்நிலையில் ரஜினியின் திரைப்பட போஸ்டர் மிக கொடூரமாக இருப்பதன் காரணமாக இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட சம்பவங்கள் இருக்கும் என மிக ஆவலுடன் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.