ஜீவா நடித்த அந்த படத்தை மட்டும் மூன்று முறை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! வெளிவரும் ரகசியம்..

rajini
rajini

தமிழ் சினிமா உலகில் பல நடிகர் இருக்கின்றனர் ஆனால் ஒரு சிலர்கள் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து உச்ச நட்சத்திரமாக இருக்கின்றனர் ஒரு சிலர் ஆரம்பத்தில் நல்ல படங்களை கொடுத்திருந்தாலும் தற்பொழுது வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் நடிகர் ஜீவா..

முதலில் இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்கள் தான் குறிப்பாக ஆசை ஆசையாய், டிஷ்யூம், ராம், கற்றது தமிழ், கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி  என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடினாலும் தற்போது பெரிய அளவு வெற்றி படங்களை கொடுக்காமல் இருக்கிறது.

இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.இந்த படம் வெற்றி பெறும் என நம்பி கொண்டிருக்கிறார். இந்த படத்தின் பிரமோஷன் போது நடிகர் ஜீவாவிடம் சில கேள்விகள் கேட்டனர் அதில் ஒன்றாக திரை உலகைச் சார்ந்த யாரிடமாவது கலந்துரையாடியது..

மகிழ்ச்சியை தந்ததா என கேள்வி கேட்டனர் இதற்கு பதில் அளித்த  நடிகர் ஜீவா. என்னுடைய 20 வருட திரை உலகில் பல பிரபலங்களை அப்படி பார்த்திருக்கிறேன் குறிப்பாக அஜித், விஜய், ரஜினி, மோகன்லால் போன்ற பல பிரபலங்கள் பேசிய தருணங்கள் என்னால் மறக்கவே முடியாது என கூறினார்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பும் போது சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தேன். ராம் படம் வெளியாகி 10 வருடம் கழித்தும் அந்தப் படத்தை மூன்று முறை பார்த்ததாக ரஜினி சார் என்னிடம் கூறினார் அந்த பாராட்டை என்னால் எப்பொழுதுமே மறக்கவே முடியாது என கூறினார். இந்த செய்தி இணையதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது.