இளம் இயக்குனர்கள் அண்மை காலமாக நல்ல படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமடைகின்றனர் அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் முதலில் ஜெயம் ரவி காஜல் அகர்வால் ஆகியோர்களை வைத்து கோமாளி என்னும் படத்தை எடுத்தார் இந்த படம் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் சிறு இடைவேளைக்கு பிறகு இயக்கி நடித்த திரைப்படம் தான் லவ் டுடே.. இந்த படம் முழுக்க முழுக்க காதல் ரொமான்ஸ் சென்டிமென்ட் காமெடி என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்தது மேலும் இந்த படம்..
இந்த காலகட்டத்திற்கு தேவையான பல விஷயங்களை கூறியிருப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு இந்த படம் ரொம்பவும் பிடித்து போனது. அதன் காரணமாக அனைத்து திரையரங்குகளிலும் படம் ஹவுஸ் புல் ஆக ஓடியது மேலும் தமிழை தாண்டி பிற மொழிகளிலும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது அதன் விளைவாக லவ் டுடே திரைப்படத்தின் வசூல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
தமிழகத்தில் மட்டுமே லவ் டுடே திரைப்படம் 30 கோடி வசூல் செய்து இருக்கிறதாம் வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லவ் டுடே படத்தை பார்த்து விட்டு இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை அழைத்து நேரில் சந்தித்து பேசினார்.
மேலும் சால்வை அணைத்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் ரஜினி. அந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது மேலும் ரஜினி மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்..