அஜித், விஜயை தொடர்ந்து அதே தவறை செய்யும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.? கோபத்தின் உச்சியில் இருக்கும் தமிழ் சினிமா.!

rajini
rajini

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து நல்ல கதைகளம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். ஒரு சில நடிகர்கள் இளமையில் ஹீரோவாக நடித்து வந்தாலும் வயதான பிறகு அப்பா சித்தப்பா போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருவது வழக்கம்.

அதற்கு மாறாக இன்றும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நம்பர் 1 இடத்தை தக்க வைத்து நடித்து வருபவர் ரஜினி. இவர் கபாலி, பேட்டை, அண்ணாத்த போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து வந்த நிலையில் தற்போது தனது 169 ஆவது திரைப்படத்தில் நடிக்க பல இயக்குனர்களிடம் கதை கேட்டு கடைசியாக நெல்சன் இடம் கமிட்டாகியுள்ளார்.

இந்த படத்தின் கதையை நெல்சன் ஒரு பக்கம் தீவிரமாக ரெடி செய்து வருகின்ற நிலையில் மறுபக்கம் படத்தில் நடிக்க நடிகர் நடிகைகளை தேர்வு செய்துள்ளனர் அந்தவகையில் இந்த படத்தில் ஐஸ்வர்யாராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார் போன்ற பலரும் நடிக்க உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதற்காக தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு இந்த படம் தொடங்க உள்ளதாக கூறப்படுகின்றன. இந்த நிலையில் முன்னணி நடிகர்கள் பலரும் தமிழ்நாட்டில் படம் எடுப்பதற்கு பல வசதிகள் இருக்கின்றன இங்கு படமெடுத்தால்  தமிழ்நாட்டில் உள்ள சினிமா தொழிலாளர் பலரும் பயனடைவார்கள் என்ற கோரிக்கையை முன்வைத்த நிலையில் திரையுலக நடிகர்கள் பலரும் இதற்கு ஒப்புக் கொண்டனர்.

இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்துவதால் பலரும் ஷாக்காகி உள்ளனர். மேலும் இங்கு உள்ள தொழிலாளர்கள் பலருக்கும் பல உதவிகளை செய்து வரும் ரஜினி இப்படி செய்வது வருத்தத்தை கொடுக்கிறது. இதற்கு எப்படி ரஜினி ஒப்புக்கொண்டார் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அஜித் விஜய் போன்ற நடிகர்கள் கூட தற்போது நடித்து வரும் படங்களின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வருகின்ற நிலையில் இதே தப்பை ரஜினியும் செய்வது பலருக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது.