தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த. இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது சுமார் ஒரு வாரத்தில் 200 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது.
மேலும் இத்திரைப்படத்தை இயக்குனர் சிவா அவர்கள் தான் இயக்கி இருந்தார் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்தது மட்டுமில்லாமல் ரஜினிக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இதர கதாபாத்திரத்தில் குஷ்பு மீனா சூரி பிரகாஷ்ராஜ் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படமானது தீபாவளியை கொண்டாடும் வகையில் திரையரங்கில் வெளியிடப்பட்டு ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி கண்டது. மேலும் நாளை சிம்புவின் மாநாடு தியேட்டரில் களமிறங்குவதன் காரணமாக அண்ணாத்த ஆட்டம் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் இப்போது தன்னுடைய அடுத்த திரைப்படம் குறித்து சில தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தான் அடுத்த திரைப்படத்தில் நடிக்க போகிறார் என சமூக வலைதள பக்கத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நமது இயக்குனர் பசங்க மற்றும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார் அந்த வகையில் சூர்யாவின் இந்த திரைப்படம் கூட பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
இதை தொடர்ந்து ரஜினி திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவலும் கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.