சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக அவர் பார்த்து வந்த வேலையை கண்டக்டர் தொழில் மட்டும் கிடையாது.?

rajini
rajini

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் புதுமுக நடிகர்களின் வரவேற்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது காலம் போகப்போக டாப் நடிகர்கள் மாறுகின்றனர். ஆனால் 40 வருடங்களாக நடித்து வரும் ரஜினி இன்றும் தனக்கான நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டு சூப்பராய் ஜொலித்தால் அவரை ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என செல்லமாக அழைத்து வருகின்றன.

இப்போதும் தொடர்ந்து படங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சினிமாவுலகில் ரஜினி சிறப்பாக ஓடினாலும் அவர் சினிமாவில் வருவதற்கு முன்பாக பல இன்னல்கள் வறுமையின்  பிடியில் சிக்கியது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

நாமெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம் ரஜினி சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக பஸ் கண்டக்டராக மட்டுமே இருந்தார் என்று ஆனால் உண்மையில் ரஜினி கண்டக்டர் ஆவதற்கு முன்பாகவே கூலி தொழில் ஆபீஸ் பாய் கார்பன்டர் என கிடைக்கின்ற எந்த தொழிலாக இருந்தாலும் வேலை செய்து வந்தார். காரணம் ரஜினியின் குடும்பம் அப்பொழுது மிடில்க்ளாஸ் குடும்பம் கூட கிடையாது.

ரொம்ப வறுமையில் சிக்கித் தவிப்பதால் வேறு வழியின்றி ரஜினி எந்த வேலை கிடைத்தாலும் அந்த வேலையை தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செய்வதை வழக்கமாக வைத்தாராம் ரொம்ப வறுமையில் இருந்த வைராக்யம் ஏன் பின் எப்படி பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணத்தை தோன்றியதாகவும் சொல்லப் படுகிறது. இதனை ரஜினி 1992 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகக் கூறினார்.

மேலும் பேசிய ரஜினி கண்டக்டர் வேலை பார்த்த பின் நான் நடிகனாக மாறினேன்.அதேபோல் எனக்கு சின்ன வயதிலிருந்தே பூர்வ ஜென்ம புண்ணியமோ என்று தெரியவில்லை எதிலும் எந்த ஒரு பயமும் கிடையாது ஆனால் ஒரே ஒருவர் மட்டும் நான் பயந்து இருக்கிறேன் அப்போது பயந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூட முடிவு செய்தேன் அப்போது தான் பக்கத்தில் மலை ஒன்று இருந்தது அந்த மலையின் உச்சியில் ஒரு சாமியார் புகைப்படம் ஒன்று இருந்தது. இதைப் பார்த்த உடன் என் மனது அமைதியானது பின் தற்கொலை செய்ய நினைக்கும் எண்ணத்தை தள்ளி போடலாம் என நினைத்தேன். ரஜினி அப்போது பார்த்த சாமி வேறு எதுவும் இல்லை இதுதான்.