சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் இத்தனை பர்சன்டேஜ் தான் தோல்வி படங்களை கொடுத்துயுள்ளார் – சினிமா பிரபலம் பேச்சு.!

rajini
rajini

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் அண்மைக்காலமாக வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் அந்த வகையில் இப்பொழுது கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169 வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் பூஜை போடப்பட்ட தற்போது ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி மற்றும் பலர் இந்த படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் தமன்னா நடிக்கிறார் என சொல்லப்பட்டாலும் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ரஜினியின் ஜெயிலர் படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு கதையாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது அதிலும் இந்த படத்தில் ஒரு வயதான கெட்டப்பில் ரஜினி நடிக்கிறார் என தெரிய வருகிறது அதை உறுதிப்படுத்தும் வகையில்  இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கூட சில புகைப்படங்கள் லீக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த பல்வேறு இளம் இயக்குனர்களுடனும் ரஜினி கைகோர்க்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முதன்மையான நடிகராக வலம் வரும் ரஜினி 40 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். இவர் இதுவரை 128 படங்களில் நடித்துள்ளார் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான்..

ஒரு சில படங்கள் தான் தோல்வியை சந்தித்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் சித்ரா லட்சுமணன் சமீபத்திய பேட்டி ஒன்று இதனை வருட திரை வாழ்க்கையில் நடிகர் ரஜினிகாந்த் தோல்வி படங்களின் எண்ணிக்கை வெறும் 2 சதவீதம் தான் என  சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.