இதுவரை எந்த திரைப்படத்திலும் செய்யாத வேலையை அண்ணாத்த திரைப்படத்தில் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! கலெக்ஷனுக்கு இதுதான் காரணம் போல..!

annaththa-02
annaththa-02

பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் திரையில் வெளியிடப்பட்ட திரைப்படம்தான் அண்ணாத்த இந்த திரைப்படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.

இதற்க்கு முன்பாக நமது இயக்குனர் அஜித்தை வைத்து விசுவாசம் என்ற திரைப்படத்தை இயக்கிய மாபெரும் வெற்றி கண்டார் அந்த வகையில் அண்ணாத்த திரைப்படமானது இவர் இயக்கிய முந்தைய திரைப்படம் சாயலில் இருப்பதால் பல ரசிகர்கள் இதன் மீது கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய பேரன் உங்களுடைய படத்தை நான் எப்போது பார்ப்பது என அடிக்கடி ரஜினியிடம் கேட்டுக் கொண்டே இருந்தான் அந்த சிறுவனின் தொல்லை தாங்காமல் இயக்குனரிடம் சீக்கிரம் படத்தை அவனுக்கு காட்டுங்கள் என்று கூரினார்.

அதன் அடிப்படையில் ரஜினியின் பேரன் படத்தை பார்த்துவிட்டு சூப்பராக இருக்கிறது என்று கூறியது மட்டுமில்லாமல் ரஜினி இந்த திரைப்படம் கிளைமேக்ஸ் போது கண் கலங்கி விட்டார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படமானது நிச்சயம் பெண்கள் அனைவரையும் கவரும் என்று கூறியது மட்டுமில்லாமல் அண்ணாத்த படத்தை பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் பெருமையுடன் பேசியுள்ளார்.

annaththa-02
annaththa-02

பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்த ஒரு திரைப்படத்தை பற்றியும் இந்த அளவுக்கு பெருமையாக பேசியது கிடையாது ஆனால் அண்ணாத்த திரைப்படத்திற்காக அவர் வாய்ஸ் ஓவர் ப்ரமோஷன் செய்துள்ளது வசூல் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.