டான் திரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே 30 நிமிடம் விடாமல் அழுத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

rajinikanth

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் டாக்டர் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமில்லாமல் கதாநாயகியாக பிரியங்கா மோகனன் நடித்துள்ளார் மேலும் இந்த கதாபாத்திரத்தில் சிவாங்கி சூரி போன்றவர்கள் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வசூல் மற்றும் விமர்சனத்தைப் பெற்றது மட்டுமில்லாமல் தற்போது சுமார் 6 நாட்களில் மட்டுமே 50 கோடிக்கும் மேலாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

மேலும் இதற்கு முன்பாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் டான் திரைப்படம் இந்த திரைப்படத்தை விட அதிக அளவு வசூல் செய்யும் என பலரும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பொழுது ரஜினிகாந்த் அவர்கள் தான் திரைப்படத்தை பார்த்ததாகவும் அதைப்பற்றி கூறியதாகவும் கூறியுள்ளார்.

அதாவது ரஜினிகாந்த் கூறியது என்னவென்றால் படம் சூப்பர்பா, நல்ல நடிப்பு கடைசி 30 நிமிடம் படத்தை பார்க்கும் பொழுது என்னால் கண்ணீரை தடுக்க முடியவில்லை என சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளார்.

don-1
don-1