சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 80 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து ஓடி கொண்டு இருக்கிறார். இப்போது பல இளம் தலைமுறை நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற பலரும் ரசிகர்களை கவறும்படியான திரைப்படங்களை கொடுத்து அதிகளவு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கின்றனர்.
இப்படி இவர்கள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும் இன்றும் ரஜினியின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் ரஜினி நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் நல்ல வரவேற்பை பெற்று அதிகளவு வசூலை பெறுகின்றன. ஆம் ரஜினியின் கபாலி, 2.0 போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் அதிகளவு வசூலை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் குடும்ப செண்டிமெண்ட் படமாக அமைந்து மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது. இந்த படத்தை தொடர்ந்து இப்போது நடிகர் ரஜினி நெல்சன் உடன் கை கோர்த்து தனது 169 ஆவது திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் நுழைவதற்கு முன் கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக வேலை செய்தாராம். அப்போது நடந்த சுவாரசிய தகவல் ஒன்றை ஒரு திரைப்பட விழாவில் பேசி உள்ளார் சூப்பர் ஸ்டார். அவர் கூறியது பேருந்தில் ஆண்கள் பின்னாலும் முன்னாடி பெண்களும் இருப்பதாக கூறியதோடு..
நான் பஸ் டிக்கெட்களை பயணிகளுக்கு கொடுத்துவிட்டு முன்னாடி போய் நின்று விடுவேன் அப்போது எனக்கு முடி அதிகமாக இருப்பதால் பஸ் சென்று கொண்டு இருக்கும் போது காற்றில் என் முடி பறக்கும் நான் என் முடியை தூக்கி விட்டு ஸ்டைலாக டிக்கெட் கேட்பேன் என்று சிரித்தபடி கூறியுள்ளார்.