மோகன் ராஜாவால் ஹிட் அடித்த படத்தையே வேண்டாமென தூக்கி எறிந்த சூப்பர் ஸ்டார்.? கைமாறும் ரீமேக் திரைப்படம்.!

mohan raja
mohan raja

தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத அதிரிபுதிரி ஹிட் படங்களை கொடுத்து வந்த மோகன் ராஜாவுக்கு தற்பொழுது மரண அடி ஒன்று வாங்கி உள்ளார். தமிழ் சினிமாவில் அவரது தம்பி ஜெயம் ரவியை வைத்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததால் அவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இதனால் தெலுங்கு பக்கத்தில் இவருக்கு ஏகப்பட்ட மவுசு இருந்தது.

அவரது திறமையைப் பார்த்த பலரும் இவரை எப்படியாவது தெலுங்கு சினிமா பக்கம் இழுத்து ஒரு படத்தை எடுத்து பார்க்க வேண்டும் என கணக்கு போட்டார் அந்த வகையில் ராம்சரண் மலையாளத்தில் வெளியான லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றினார் இதை அவரது அப்பாவை வைத்து எடுக்க மோகன் ராஜாவை அழைத்தார்.

இந்த ரீமேக் திரைப்படத்தில் சற்று மாறுதலைக் கொண்டு தெலுங்கு ரசிகர்கள் ரசிக்கும் படி சில காட்சிகளை மாற்றி அமைக்க சிரஞ்சீவி கேட்டுக்கொண்டதற்கு இணங்க மோகன் ராஜாவும் சில மாறுதல்களை செய்து அதை கொடுத்துள்ளார் அதை முழுவதையும் பார்த்த சிரஞ்சீவி செம கடுப்பாகி நல்லாவே இல்லை என கூறினார்.

அதன் பிறகு இந்தத் திரைப்படத்திற்கு வேறு ஒரு இயக்குனரை அல்லது மோகன்ராஜாவையே வேறு ஒரு மாற்றத்தை கொடுத்து திரும்ப எடுக்க சொல்லலாமா என சிரஞ்சீவி தனது மகன் ராம்சரணுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

mohan raja
mohan raja

இப்படி இருக்க தற்போது ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது மேலும் இந்த ரீமேக் உரிமையை வேறு ஒரு தயாரிப்பாளருக்கு விற்க தற்பொழுது  முடிவெடுத்துள்ளாராம் ராம் சரண். இதனால் மோகன்ராஜா இந்த திரைப்படத்தை பணியாற்ற முடியாமல் போனது.