தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் டாப் நடிகராக ரஜினி கமல் இருந்தனர் இந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே யார் நடிகர் பெஸ்ட் என போட்டிகள் நிலவி வந்தது. பின்பு காலப்போக்கில் தற்போது அஜித் விஜய்க்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர்.
தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் நடிகர்களாக அஜித் விஜய் தான் இருந்து வருகின்றனர். இருந்தாலும் இப்பொழுதும் ரஜினி மற்றும் கமல் இருவருமே ஹீரோவாக பல சிறப்பான படங்களை கொடுத்து தான் வருகின்றனர். மேலும் அஜித், விஜய் படங்கள் வெளிவந்தால் முதல் சில நாட்கள் அவர்களது படத்தை ரசிகர்கள் கொண்டாடினாலும்..
தற்போதும் தமிழில் வெளிவந்த படங்களில் அதிக வசூலை பெற்ற ரஜினியின் 2.0 படம் தான் முதலில் உள்ளது இந்த படம் 655 கோடி முதல் 800 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது அடுத்ததாக அண்மையில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் 380 கோடிக்கு..
மேல் வசூளை அள்ளி இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ரஜினியின் கபாலி படம் இருக்கிறது. இந்த நிலையில் ரஜினி இதுவரை ஒரு படத்திற்கு 90 கோடி சம்பளமாக வாங்கி வந்தார். ஆனால் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்திற்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் விஜய்க்கு 100 கோடி சம்பளமாக கொடுத்ததாம்.
இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி அடுத்ததாக நடிக்க உள்ள ஜெயிலர் படத்திற்கு சன் பிக்சர் நிறுவனம் ரஜினிக்கு 128 முதல் 148 கோடி வரை சம்பளம் தருவதாக பேசி வருகின்றனர். இந்த படத்தின் மூலம் மீண்டும் ரஜினி அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.