திரையுலக பட்டாளமே எதிர்பார்த்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இவர்களது திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. திருமணத்தில் பல நட்சத்திர பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் ஷாருக்கான், ரஜினி, கார்த்தி, சூர்யா, இயக்குனர் அட்லி, இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், அனிருத் போன்ற பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் நடிகைகள் அவர்களது பிரபலமான கார்களில் வந்துள்ளனர். அப்படி எந்தெந்த பிரபலங்கள் எந்தெந்த கார்களில் வந்துள்ளனர் என்பது குறித்து பார்ப்போம்.
நடிகர் ரஜினிகாந்த் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணத்திற்கு வந்து அவர்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தார். அவர் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரில் வந்திருக்கிறார் இந்த கார் சுமார் 80 லட்சம் மதிப்பு உடையதாகும். நடிகர் அஜித்தின் குடும்பத்திலிருந்து அஜித்தின் மனைவி ஷாலினி, மச்சினிச்சி ஷாம்லி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் போன்றவர்களும் வந்தனர்
இவர்கள் டெயோட்டா ஹைஏஸ் வேனில் வந்து இறங்கிய வீடியோவும் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியது. நடிகர் சூர்யா நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிஎம்டபிள்யூ 730LD காரில் வந்து இருக்கிறார். மேலும் நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குனர் அட்லி ஆகியோர் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து இறங்கினார்.
மேலும் பல நடிகர் நடிகைகளும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணத்திற்கு அவர்களது காரில் வந்து இறங்கி பின்பு திருமண இடத்திற்கு செல்ல அவர்களுக்கு பேட்டரி கார் ஒன்று தயார் செய்யப்பட்டிருந்தது அந்த காரில் ஏறி திருமண இடத்திற்கு சென்றுள்ளனர்.