பல ஆண்டுகளாக வெள்ளித்திரையில் நடித்துவரும் நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இவர் தமிழ் திரை உலகில் ஆரம்ப கால கட்டத்தில் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்து இருந்தாலும் அடுத்தடுத்து நிறைய ஹிட் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து.
அதன் மூலம் தற்போது பிரபலமான நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது அண்ணாத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகிய இரண்டும்.
சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய அளவில் வைரலானதை நாம் பார்த்திருப்போம் அதனைத் தொடர்ந்து இந்த மோஷன் போஸ்டரில் ரஜினி புல்லட்டில் கத்தியுடன் வலம் வந்தார் இந்த வீடியோ காணொளி ரசிகர்கள் மத்தியில் தற்பொழுதும் வைரலாகி வருகிறது.
அதைவிட சமீபத்தில் ரஜினி தனது இளம் வயதில் புல்லட்டில் கைகளை விட்டுவிட்டு சிகரெட்டை பற்றவைத்து ஸ்டைலாக புகை பிடித்துக் கொண்டு வந்த வீடியோவை கூட நாம் பார்த்திருக்கலாம் அதனை தொடர்ந்து தற்போது ரஜினியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது 1982 ஆம் ஆண்டு வெளியான புதுக்கவிதை படத்தின் போஸ்டரை ரசிகர்கள் பதிவிட்டுள்ளார்கள்.
இந்த புகைப்படத்தில் ரஜினி ரேஸ் பைக்கில் அமர்ந்து இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.மேலும் இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் ரஜினிக்கு இது புதிய விஷயம் இல்லை இவர் மிகவும் திறமைசாலி எனக் கூறி வருகிறார்கள்.