சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும் தொடர்ந்து படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்து படத்தை வெற்றிப்படமாக மாற்றுகின்றனர் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா பயணத்தை தொடங்கிய நாளிலிருந்து இப்போது வரையிலும் மக்கள் மற்றும் ரசிகர்களை கவரும்படி என கமர்ஷியல் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகளை குவித்து வருகிறார்.
இதனால் தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் இப்போது கூட இவர் நெல்சன் உடன் கை கோர்த்தது 169 திரைப்படத்தில் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா உலகிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி ஒரே மாதிரியான குணம் கொண்டவர்.
பெண்கள் வந்தாலும் எதிர்த்து நின்று மரியாதை கொடுத்து பின் அவர்களை உட்கார வைத்த பிறகுதான் ரஜினி உட்காருவராம் அந்த அளவிற்கு மரியாதையாக பழக கூடியவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அவர் சிம்பிளிசிட்டி ஆக இருக்கிறார்கள் என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
உதாரணம் அவரை பேட்டி ஒன்றில் கூறி உள்ளது நான் பயன்படுத்தும் கார் பிஎம்டபிள்யூ, நான் போயஸ் கார்டனில் இருக்கும் வீட்டில் தான் வசிக்கிறேன், நான் சாப்பிடுவது 7 ஸ்டார் அல்லது 5 ஸ்டார் ஹோட்டல்களில் தான் சாப்பிடுகிறேன். அப்படி இருக்கையில் நான் டிரஸ் மட்டும் சிம்பிளாக போட்டு விட்டால் அது எப்படி சிம்பிளிசிட்டியாக இருக்க முடியும் என கூறி உள்ளார்.
உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும் நல்ல சம்பாத்தியத்தில் நன்றாகத்தான் வாழ்கிறார்கள் அவர்கள் மரியாதை கொடுக்கலாம். கம்மியான விலையில் ட்ரெஸ் போடலாம் அதற்காக சிம்பிளிசிட்டி இருக்கிறார்கள் என்று அர்த்தமில்லை என்பதை மறைமுகமாக அவர் கூறியுள்ளார்.
இச்செய்தி இப்பொழுது மிகப்பெரிய அளவில் பேசப்படக் காரணம் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் 100 ரூபாய் பிரியாணி ஆக இருந்தாலும் சாப்பிடுவார்கள் என கூறினர் மேலும் 100 ரூபாய் பிரியாணியை சாப்பிட்டு வந்தால் அவர் சிம்பிளிசிட்டி என பலரும் கூறி வருகின்றனர். இதற்கு பெயர் சிம்பிளிசிட்டி இல்லை என சில ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார் ரஜினி. இதோ நீங்களே பாருங்கள் அந்த வீடியோவை..