தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்துள்ளது
இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததையடுத்து அவர் சென்னை வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். விரைவில் அவர் அமெரிக்கா செல்ல உள்ளார் இந்த நிலையில் ரஜினி அடுத்த அடுத்த திரைப்படத்தை யார் இயக்குவது தயாரிப்பது என்ற கேள்வி மக்கள் மத்தியில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
அதற்கு ஒரு முடிவு கட்ட தற்பொழுது ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ரஜினி முன்பே சொன்னது போல அண்ணாத்த திரைப்படத்தையும் முடித்துவிட்டு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை எடுத்த தேசிங்கு பெரியசாமி உடன் இணைவது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது இதனை அடுத்து அவர் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஏனென்றால் தமிழ் சினிமாவில் தற்போது சூப்பரான படங்களை கொடுத்து வருகிறார் மேலும் ரஜினியை வைத்து பேட்ட என்ற படத்தை எடுத்து உள்ளதால் இவருக்கு ரஜினியின் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு போகுமா போகாதா என்ற கேள்வி எழுகிறது.
ஏனென்றால் நடிகர் தனுஷ் தற்போது ரஜினியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ஏற்கனவே தனுஷ் தமிழில் பவர் பாண்டி என்ற திரைப்படத்தை எடுத்து வெற்றி கண்டிருந்தார் அதனால் ரஜினியின் அடுத்த படத்தை எடுக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.