விஜய்யை கட்டிப்பிடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி.! தளபதி வீட்டில் இருக்கும் இந்த புகைப்படத்தை யாராவது பார்த்துள்ளீர்களா.

தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் தற்பொழுது வசூல் மன்னனாக வலம் வருகிறார். தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது மட்டுமல்லாமல் 50 சதவிகித திரையரங்கு இருக்கைகளுடன் வெளியாகிய மாஸ்டர் கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 65 திரைப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது. இந்த நிலையில் தளபதி 65 திரைப் படத்தை இயக்குவதற்கு சிவா அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என பல இயக்குனர் பட்டியல் அடிப்பட்டது.

ஆனால் தளபதி 65 திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் தான் இயக்கப்போகிறார் என்றும் சன் பிக்சர் தயாரிப் பில் அனிருத் இசையில் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில் தளபதி 65 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது என தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு விஜய்யின் மார்க்கெட் அதிகரித்துள்ளது, அதனால் விஜய்யின் சம்பளமும் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் தளபதி விஜய் பிகில் திரைப்படத்தில் 50 கோடி வரை சம்பளமாக பெற்றார் எனவும் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு 30 கோடி சம்பளத்தை அதிகரித்து 80 கோடி வரை சம்பளமாக ஒரு திரைப்படத்திற்கு வாங்குகிறார் என தகவல் கிடைத்தது.

அதுமட்டுமில்லாமல் தளபதி 65 திரைப்படத்திற்கு நூறு கோடி ரூபாய் சம்பளம் பெற இருக்கிறார் எனவும் கூறுகிறார்கள் இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகிய தர்பார் திரைப்படத்திற்கு ரஜினி நூறு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினாராம் ஆனால் தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அண்ணாத்த  திரைப்படத்தில் ரஜினியின் சம்பளம் குறைந்துவிட்டது.

இப்படியொரு நிலையில் விஜய்யை ரஜினி கட்டிப்பிடித்து இருக்கும் புகைப்படம் விஜயின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.  இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vijay-rajini
vijay-rajini