சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் இந்த படம் கிராமத்து கதையை மையமாக வைத்து உருவாகி இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது.
இந்த திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூலை அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169 வது திரைப் படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கினார். ரஜினியின் இந்த படத்தை இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறாராம். இந்த படத்திற்கு முன்பாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் எனும் படத்தை மிக பிரமாண்டமாக எடுத்திருந்தார்.
இந்த படம் ஆக்ஷன், காமெடி கலந்த படமாக உருவாகி இருந்தது படம் ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல் இல்லாததால் தற்போது கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படத்தை அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பார்த்து சற்று நேரம் அமைதி ஆகிவிட்டார் தகவல் வெளியாகியது.
அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது படத்தின் இயக்குனரை மாற்ற உள்ளார் என்று செய்திகள் தீயாய் பரவி வந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி பார்க்கை யில் எல்லாம் வெறும் கட்டுக்கதை தானாம். ரஜினியின் 169 திரைப்படத்தை நெல்சன் தான் இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூலையில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடியாக எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.